CRIME
“அய்யயோ.. 640 அடி ஆழத்தில் சிக்கிய 9 வயது சிறுவன்..” 40 மணி நேரப் போராட்டம்! அதிகாலை 3:30 மணிக்கு முடிந்த அந்தப் பயங்கரம்.. பெரும் சோக சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் பலோடி பகுதியில் உள்ள புனியாவின் தானி என்ற கிராமத்தில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 9 வயது சிறுவன் போமாராம், சுமார் 40 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் சோகம் அரங்கேறியுள்ளது. 1050 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளைக் கிணற்றின் 640 அடி ஆழத்தில் சிறுவன் போமாராம் சிக்கியிருந்தான். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் வல்லுநர்கள் இணைந்து தொடர்ச்சியாக 40 மணி நேரம் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அதிகாலை 3:30 மணியளவில் அந்தச் சிறுவன் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியே மீட்கப்பட்ட போதிலும், அவனது உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பெற்றோருக்கு இருந்த ஒரே ஒரு ஆசை மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் பிரார்த்தனைகளும் இந்தச் சோகமான முடிவால் சுக்குநூறாக உடைந்து போயின. போமாராமின் ஆன்மா சாந்தியடையவும், இந்த மீளாத் துயரத்தைத் தாங்கும் வலிமையை அவனது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கவும் சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
