நிஜ உலக ‘லக்கி பாஸ்கர்’..! சம்பளப் பணத்தில் கைவச்ச கணக்காளர்.. தாய், தம்பி அக்கவுண்ட்டிற்கு கோடிகளை மாற்றி மெகா மோசடி – சென்னையில் பரபரப்பு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நிஜ உலக ‘லக்கி பாஸ்கர்’..! சம்பளப் பணத்தில் கைவச்ச கணக்காளர்.. தாய், தம்பி அக்கவுண்ட்டிற்கு கோடிகளை மாற்றி மெகா மோசடி – சென்னையில் பரபரப்பு..!

Published

on

சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் பெண் கணக்காளராகப் பணியாற்றி வந்த மேனகா ஞானம் என்பவர், நிறுவனத்தின் பணத்தை மோசடி செய்த குற்றத்திற்காக வடக்கு கடற்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். ஆரம்பத்தில் இவர் சுமார் ரூ.14.23 லட்சம் பணத்தைக் கையாடல் செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், தற்போது நடத்தப்பட்ட முதற்கட்ட போலீஸ் விசாரணையில் இந்த மோசடியின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படப் பாணியில் அரங்கேறியுள்ள இந்த “ரியல் லக்கி பாஸ்கர்” மோசடியில், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளப் பணத்தை மேனகா ஞானம் முறைகேடாகத் தனது குடும்பத்தினரின் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். குறிப்பாக, தனது தாய் புஷ்பா ஞானம் மற்றும் தம்பி மைக்கேல் ராஜ் ஆகியோரின் வங்கி கணக்குகளுக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்து இந்த மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இதன் பின்னணியில் உள்ள முழு விவரங்கள் மற்றும் மோசடி செய்யப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in