LATEST NEWS
‘வெஜ் ரோல்’ தாமதமானதால் இப்படியா..? உணவு ஆர்டரில் ஏற்பட்ட சண்டையில் கத்திக்குத்து – ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த வாலிபர்..!!!
ஜார்கண்ட் மாநிலம் சரைகேலா-கர்சவான் மாவட்டத்தின் ஆதித்யபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், ஃபாஸ்ட் புட் கடையில் உணவு ஆர்டர் செய்வதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வாலிபர் சேகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புதன்கிழமை நள்ளிரவில், ஆதித்யபூர் பகுதியில் உள்ள துர்கா பூஜை பந்தல் அருகே தனது நண்பர்களுடன் சேகர் ஃபாஸ்ட் புட் கடைக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர்கள் ஆர்டர் செய்த ‘வெஜ் ரோல்’ மற்றும் ‘சௌமின்’ ஆகிய உணவுகளைத் தயாரித்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கடையில் இருந்த மற்ற இளைஞர்களுக்கும் சேகரின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்து, அது கடுமையான மோதலாக மாறியது. இந்த மோதலின் போது ஏற்பட்ட கத்திக்குத்தில் சேகர் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு முதல் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த சேகர் உடனடியாக சிகிச்சைக்காக டிஎம்எச் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற காயமடைந்தவர்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த ஆதித்யபூர் போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இந்த கொடூரக் கொலையில் தொடர்புடைய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
