LATEST NEWS
ஒரு குடும்பமே அழிந்தது..! கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி, மகன் மூவரும் அடுத்தடுத்து மரணம்.. ஸ்கேட்டிங் பயிற்சி முடிந்து திரும்பியபோது சோகம்..!!
விழுப்புரம் அருகே கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற கார் விபத்தில், ஸ்கேட்டிங் பயிற்சி முடித்துவிட்டுத் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்று மாலை ஸ்கேட்டிங் பயிற்சி முடிந்துவிட்டு, குடும்பமாகத் தங்களது பைக்கில் ஏற முயன்றபோது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற கார் ஒன்று இவர்கள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த அதிவேக விபத்தில், குணவனிதா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூர விபத்தில் படுகாயமடைந்த குணவனிதாவின் கணவர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குணவனிதாவின் கணவர் தமிழ்மணியும், அவர்களது மகன் கீர்த்தனும் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் இந்தச் சாலை விபத்தில் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த விழுப்புரம் பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
