மக்களே அலெர்ட்..! வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்: இந்தியா பரிந்துரைத்த ‘முரசு’ புயல் தமிழகத்தைத் தாக்குமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

மக்களே அலெர்ட்..! வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்: இந்தியா பரிந்துரைத்த ‘முரசு’ புயல் தமிழகத்தைத் தாக்குமா..?

Published

on

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (அக்டோபர் 23) புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் தீவிரமடைந்து புயலாக மாறினால், அதற்கு ‘முரசு புயல்’ என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட உள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயரிடுவதற்காகப் பிராந்திய உறுப்பு நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள சர்வதேசப் பட்டியலில், ‘முரசு’ என்ற தூய தமிழ்ப் பெயரை இந்தியா பரிந்துரை செய்துள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது புயலாக மாறும் பட்சத்தில், வரிசைக்கிரமத்தின் அடிப்படையில் இந்தத் தமிழ்ப் பெயர் அதற்கு அதிகாரப்பூர்வமாகச் சூட்டப்படும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in