“பிள்ளைகள் இருந்தால் நான் வரமாட்டேன்..” கள்ளக்காதலன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. இரட்டை மகன்களுக்கு பெற்ற தாயே செய்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“பிள்ளைகள் இருந்தால் நான் வரமாட்டேன்..” கள்ளக்காதலன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. இரட்டை மகன்களுக்கு பெற்ற தாயே செய்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் டீக் மாவட்டத்தில் உள்ள படேஸ்ரா கிராமத்தில், தன் கள்ளக்காதலனுக்காகப் பெற்ற தாய் தனது இரட்டை மகன்களைக் கழுத்தறுத்துக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் இறந்த பிறகு தனது தந்தை வீட்டில் வசித்து வந்த பிரீத்தி சௌத்ரி என்ற பெண்ணுக்கு, அருகில் வசிக்கும் ஒரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ள நிலையில், வினய் மற்றும் விஷ்ணு என்ற இரட்டை மகன்கள் தாயின் இந்தக் கள்ளக்காதலை கடுமையாக எதிர்த்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன், பிள்ளைகள் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவளுடனான உறவை முறித்துக் கொள்வதாக மிரட்டியுள்ளான். இதனால், காதலனுக்காகத் தன் பிள்ளைகளையே தீர்த்துக்கட்ட பிரீத்தி முடிவு செய்துள்ளார்.

குழந்தைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, பிரீத்தி தனது 16 வயது மூத்த மகனின் உதவியுடன் வினய் மற்றும் விஷ்ணுவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வெறும் 6 மணி நேரத்திற்குள் இந்தக் கொலை மர்மத்தை உடைத்தனர். பெற்ற தாயே இந்தத் துரோகத்தைச் செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தாய் பிரீத்தி சௌத்ரி, அவளது 16 வயது மூத்த மகன் மற்றும் அவளது கள்ளக்காதலன் ஆகிய மூவரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in