“கர்ச்சீப்பால் முகத்தை மூடி” ரகசியமாகச் சந்திக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்ல… பா.ஜ.க கூட்டணி வதந்திகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் முற்றுப்புள்ளி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கர்ச்சீப்பால் முகத்தை மூடி” ரகசியமாகச் சந்திக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்ல… பா.ஜ.க கூட்டணி வதந்திகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் முற்றுப்புள்ளி..!!

Published

on

தமிழக மக்களின் நலனுக்காக மட்டுமே முதலமைச்சர் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்திக்கிறாரே தவிர, பா.ஜ.கவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது என்பதில் முதலமைச்சர் விஜய் மிகவும் தெளிவாக உள்ளார் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தவெக அரசு தனது கொள்கைகளில் உறுதியாக இருப்பதாகவும், அரசியல் லாபங்களுக்காகக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காது என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், கர்ச்சீப்பால் முகத்தை மூடிக்கொண்டு ரகசியமாக யாரையும் சந்திக்க வேண்டிய அவசியம் தவெக தலைமைக்கு இல்லை என்று சுட்டிக்காட்டினார். மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி மற்றும் திட்டங்களைப் பெறுவதற்காக மட்டுமே அரசு ரீதியான சந்திப்புகள் வெளிப்படையாக நடக்கின்றன என்று அவர் விளக்கமளித்தார்.

Advertisement

தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதிலும், மாநில தன்னாட்சியைப் பாதுகாப்பதிலும் இந்த அரசு ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்று அமைச்சர் நிர்மல் குமார் உறுதிபடக் கூறியுள்ளார். பா.ஜ.கவுடனான கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தி தவெக அரசு தொடர்ந்து பயணிக்கும் என்றும் அவர் தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in