CRIME
ஒரே ராத்திரியில 1 கோடி காலி… ஐபோன் 17, லேப்டாப்னு பார்த்து பார்த்து தூக்கிய கில்லாடிகள்.. நள்ளிரவில் ஸ்கெட்ச் போட்டு கைவரிசை காட்டிய மாஸ்க் திருடர்கள்..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள சநாத்தல் சர்க்கிள் அருகில் உள்ள நவ்பூர் கிராமத்தில் அமைந்துள்ள இங்க்ராம் மைக்ரோ நிறுவனத்தின் ஸ்டோரில் மிகப்பெரிய திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. முகமூடி அணிந்த மூன்று திருடர்கள் இந்த ஸ்டோரின் பின் பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன மின்னணு சாதனங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான முழு விவரங்களும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
அக்டோபர் 21ஆம் தேதி இரவு 1 மணிக்கும் 2:30 மணிக்கும் இடையே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளிகள் அடையாளம் தெரியாமல் இருக்கத் தங்கள் தலை மற்றும் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு, பினப்புறமாக உள்ள வயல்வெளி வழியாக ஸ்டோருக்கு வந்துள்ளனர். ஸ்டோரின் பாதுகாப்புக் காவலர்கள் ரோந்துப் பணியின் போது பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கவனித்து உடனடியாக ஸ்டோர் மேலாளரான சுதிர் நாயருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து ஆய்வு செய்தபோது, பல இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஆப்பிள் மற்றும் இதர முன்னணி நிறுவனங்களின் அதிவிலை உயர்ந்த காட்ஜெட்டுகள் குறிவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 40 ஐபோன் 17 சீரிஸ், 30 ஐபோன் 16, 36 ஆப்பிள் வாட்ச், 15 டெல் லேப்டாப்கள், 11 எச்பி லேப்டாப்கள், 20 ஐபேடுகள், ஐபேடு ப்ரோ சாதனங்கள் மற்றும் லேப்டாப் பைகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அகமதாபாத் ஊரகக் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
