“பிறப்புறுப்பில் பைப் வைத்து கொடூர தாக்குதல்…” ஓடும் காரில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. 6 மிருகங்களின் வெறிச்செயல்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“பிறப்புறுப்பில் பைப் வைத்து கொடூர தாக்குதல்…” ஓடும் காரில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. 6 மிருகங்களின் வெறிச்செயல்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், உஜ்ஜைனில் ஓடும் காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி வந்த உஜ்ஜைனைச் சேர்ந்த சக்ரேஷ் ஜெயின் என்ற நபர் அவரைச் சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். இதன்பேரில் அங்கு சென்ற அந்தப் பெண்ணை, சக்ரேஷ் மற்றும் அவனது கூட்டாளி ஒருவன் மேகதூத் ஹோட்டல் அருகே காரில் சந்தித்துள்ளனர்.

அதன் பிறகு, சக்ரேஷின் நண்பர்கள் மேலும் 4 பேர் காரில் ஏறி, அந்தப் பெண்ணை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும், அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கி கொடூர சித்திரவதை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்னர், இந்தூர் அரவிந்தோ மருத்துவமனைக்கு வெளியே அந்தப் பெண்ணை இறக்கிவிட்டு அவர்கள் தப்பியுள்ளனர். அன்றிரவு 9 மணியளவில் அந்தப் பெண் தனது வளர்ப்பு மைனர் சகோதரனைத் தொடர்பு கொண்டு, அதன் பின் இருவரும் நானாகேடா காவல் நிலையத்தை அடைந்து புகார் அளித்துள்ளனர். இந்த வீடியோ வாக்குமூலத்தின் அடிப்படையில் சக்ரேஷ் ஜெயின் மற்றும் மற்றொருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in