“ஐயோ சார் வலிப்பு வந்திட்டு” இரவு 10 மணிக்கு கூச்சலிட்ட கைதிகள்… தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியது எப்படி..? சிறைத்துறை விளக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ சார் வலிப்பு வந்திட்டு” இரவு 10 மணிக்கு கூச்சலிட்ட கைதிகள்… தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியது எப்படி..? சிறைத்துறை விளக்கம்..!!

Published

on

தேனி மாவட்டச் சிறையில் இருந்து கைதிகள் நாடகமாடித் தப்பியோடிய விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு சிறைத்துறை அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. இரவு 10 மணியளவில் அரங்கேறிய இந்தச் சதித் திட்டத்தில், கைதிகள் தங்களின் தப்பிக்கும் உத்திக்காக முன்னெடுத்த அதிர்ச்சியூட்டும் செயல்முறைகள் வெளியாகியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒருவருக்கு திடீரென வலிப்பு வந்ததாகக் கூறி மற்ற கைதிகள் அனைவரும் கூச்சலிட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். சத்தத்தைக் கேட்டுப் பதறிய பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர், கைதியின் உடல்நிலையை உறுதி செய்வதற்காகச் சிறை அறைக்குள் சென்றுள்ளார்.

Advertisement

அப்போது, அறையின் உள்ளே நுழைந்த அந்த காவலரையும், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மற்ற காவலர்களையும் கைதிகள் ஒன்றுசேர்ந்து திடீரெனத் தாக்கியுள்ளனர். பின்னர், காவலர்களிடமிருந்த சிறைச்சாலைச் சாவிகளைப் பறித்துக் கொண்டு, பிரதான நுழைவாயில் வழியாகக் கைதிகள் தப்பியோடியுள்ளனர் என்று சிறைத்துறை தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in