“டேய் வேணாம்டா” அலறியபடி ஓடிய தந்தை.. கண் முன்னே 4-வது மாடியிலிருந்து குதித்த DRDO விஞ்ஞானி மகன்.. அடுத்த நொடியே துடிதுடித்து பலி….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டேய் வேணாம்டா” அலறியபடி ஓடிய தந்தை.. கண் முன்னே 4-வது மாடியிலிருந்து குதித்த DRDO விஞ்ஞானி மகன்.. அடுத்த நொடியே துடிதுடித்து பலி….!!

Published

on

பெங்களூருவில் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றிய சரத் கட்டியார், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 21 அன்று மாலை பெங்களூரு சீகேஹல்லி பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

விஞ்ஞானி சரத் கட்டியார் கடந்த சில மாதங்களாகக் கடுமையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, அதற்கான மருத்துவச் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். சம்பவத்தன்று மாலையும்கூட அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவிட்டுத்தான் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

Advertisement

அன்றைய தினம் சரத்தின் குடும்பத்தினர் அவரைப் பின்தொடர்ந்து கண்காணிக்க முயன்றனர். அப்போது திடீரென சரத் குடியிருப்பின் 4-வது மாடியை நோக்கிச் சென்றுள்ளார்.

அவரைத் தடுக்க முயன்ற குடும்பத்தினரின் முயற்சி பலனளிக்காமல், அவர் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in