CRIME
“தவறான திசையில் வந்த எமன்..!” மகளைக் காப்பாற்றப் போன தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. சுக்குநூறாக நொறுங்கிய ஆம்புலன்ஸ்.. பதறவைக்கும் பின்னணி..!!
ஆதிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் இருவர், மகளின் மருத்துவ சிகிச்சைக்காக ஹைதராபாத் சென்று கொண்டிருந்த போது நேர்ந்த கொடூர சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆதிலாபாத் மாவட்டம் காடிகுடா பகுதியைச் சேர்ந்த மேஸ்ராம் சரஸ்வதி (22) என்ற இளம்பெண் உடல்நலக் குறைவு காரணமாக ஆதிலாபாத் ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது நிலைமை மோசமடைந்ததையடுத்து, சிறந்த சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் அவரது தாய் மேஸ்ராம் பாருபாய் (55) என்பவரும் உடன் சென்றுள்ளார்.
இவர்களது ஆம்புலன்ஸ் நிர்மல் மாவட்டம், சோன் மண்டலத்திற்கு உட்பட்ட காட்தல் கிராமத்தின் வெளிவட்டச் சாலை அருகே சென்றுகொண்டிருந்த போது தவறான திசையில் அதிவேகமாக வந்த ஒரு லாரி, ஆம்புலன்ஸ் மீது மிகக் கொடூரமாக மோதியது. இந்த கோர விபத்தின் தாக்கத்தால் ஆம்புலன்ஸ் சுக்குநூறாக நொறுங்கியதுடன், தாய் பாருபாய் மற்றும் மகள் சரஸ்வதி ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மகளைக் காப்பாற்றத் துடித்த தாயும், நோயோடு போராடிய மகளும் விபத்தில் சிக்கி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
