“தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறாரா முதல்வர்..?” தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் டிடிவி தினகரனின் அறிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறாரா முதல்வர்..?” தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் டிடிவி தினகரனின் அறிக்கை..!!

Published

on

தமிழ்நாடு அமைச்சரவை நிர்வாகத் திறனற்ற கோமாளிகளின் கூடாரமாகத் திகழ்கிறது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். திருப்பூர் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர், ஆறுகளில் நுரை பொங்குவதற்கு மக்களின் சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடுதான் காரணம் என்று வினோதமான விளக்கமளித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணராமல் அபத்தமான காரணங்களைக் கூறும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தனது துறையின் பெயரைக் கூட சரியாகத் தெரியாமல் குழம்பியவர் என்றும் அவர் சாடியுள்ளார்.

தொடர்ந்து தற்போதைய அமைச்சரவையை விமர்சித்துள்ள டிடிவி தினகரன், முன்பு காற்று வீசாததால் மின் தட்டுப்பாடு என்ற எரிசக்தித் துறை அமைச்சர், டெங்குவிலிருந்து தப்பிக்க முழுக்கைச் சட்டை அணியச் சொன்ன சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் தற்போது சோப்பு-ஷாம்பு காரணம் கூறும் சுற்றுச்சூழல் அமைச்சர் என ஒட்டுமொத்த அமைச்சரவையுமே நிர்வாகத் திறனற்றவர்களால் நிறைந்திருக்கிறது என்று கூறியுள்ளார். அரசியல் விபத்தினால் முதலமைச்சரான ஜோசப் விஜய், தனது அமைச்சரவையின் இத்தகைய கோமாளித்தனங்களை அறிந்திருக்கிறாரா அல்லது தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறாரா என்றும் அவர் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

எனவே, ஒவ்வொரு மக்கள் பிரச்சினைக்கும் இவ்வாறான அபத்தமான மற்றும் வேடிக்கையான விளக்கங்களை அளித்து நேரத்தை வீணடிப்பதை அரசு கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஆறுகளில் நுரை பொங்குவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நீர்நிலைகளில் சட்டவிரோதமாக ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுவதைத் தடுத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய்யும், சுற்றுச்சூழல் துறையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in