LATEST NEWS
இவர யாருமே கலாய்க்க மாட்டீங்களா..? நோபல் பரிசுக்கே டஃப் கொடுக்கும் உலகமகா கண்டுபிடிப்புடா சாமி… தவெக அமைச்சரை வெறித்தனமாக கலாய்த்த செல்லூர் ராஜு..!!
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆற்றில் நுரை வருவதற்கு ஷாம்பு மற்றும் சோப்புதான் காரணம் என்று கூறிய தவெக அமைச்சரின் கருத்தை கிண்டல் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆற்றில் நுரை பொங்குவது பற்றிய இந்த விளக்கம் ஒரு ‘உலகமகா கண்டுபிடிப்பு’ என்றும், இதற்காக அந்த அமைச்சருக்கு நோபல் பரிசே வழங்கலாம் என்றும் அவர் தனது பாணியில் நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.
கடந்த காலங்களில் தான் எகிப்து நாட்டை ‘ஈஜிபுத்’ என்று தவறாக உச்சரித்ததற்கும், அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க ‘தெர்மாகோல்’ மிதக்கவிட்ட திட்டத்திற்கும் சமூக வலைதளங்களில் தன்னை கடுமையாக விமர்சித்து ஓட்டியதை செல்லூர் ராஜு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தங்களின் கருத்துக்களை மட்டும் அவ்வளவு தூரம் விமர்சித்தவர்கள், தற்போதைய அமைச்சரின் இந்த விசித்திரமான விளக்கத்திற்கு ஏன் இன்னும் எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆற்றின் மாசடைவுக்கு சோப்பு, ஷாம்புதான் காரணம் எனக்கூறிய தற்போதைய ஆளுங்கட்சி அமைச்சரின் பேச்சை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து, முந்தைய விமர்சனங்களோடு ஒப்பிட்டுப் பேசியுள்ள செல்லூர் ராஜு, இறுதியாக “அட என்னங்கப்பா போங்கப்பா.. அழுவ விடுறீங்கப்பா..” என்று நையாண்டியுடன் கிண்டல் அடித்துள்ளார்.
