“சுட்டு கொல்லவா..? நிர்வாணமா போறீங்களா..?” சிறுவன் முத்தமிட்டதால் குடும்பத்தினருக்குக் கொடுத்த கொடூர ஆப்ஷன்..! போலீஸ் எடுத்த தடாலடி நடவடிக்கை..! வைரலாகும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சுட்டு கொல்லவா..? நிர்வாணமா போறீங்களா..?” சிறுவன் முத்தமிட்டதால் குடும்பத்தினருக்குக் கொடுத்த கொடூர ஆப்ஷன்..! போலீஸ் எடுத்த தடாலடி நடவடிக்கை..! வைரலாகும் பகீர் வீடியோ..!!

Published

on

தெற்கு கல்கத்தாவில் 13 வயது சிறுமியை 19 வயது வாலிபர் முத்தமிட்டதாகக் கூறி, அச்சிறுவன் மற்றும் அவனது பெற்றோரைக் கொடூரமாகத் தாக்கி நிர்வாண ஊர்வலம் செல்ல வைத்த வன்கொடுமைச் சம்பவத்தில் தொடர்புடைய கொடூரக் குற்றவாளிகளைப் போலீசார் அரை ஆடையுடன் தெருவில் நடக்க வைத்துப் பழி தீர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்கத்தா தெற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று 13 வயது சிறுமியை 19 வயது வாலிபர் ஒருவர் முத்தமிட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் தந்தை, அந்த வாலிபரையும் அவனது நண்பரையும் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், வாலிபரின் பெற்றோரையும் அங்க வரவழைத்துள்ளனர். அங்கு வந்த சிறுவனின் குடும்பத்தினரிடம், “போலீஸ் கேஸில் சிக்குவது, துப்பாக்கியால் சுட்டுச் சாவது, அல்லது உயிரைக் காப்பாற்ற நிர்வாணமாக வீதியில் ஊர்வலம் சென்று வீடியோ எடுக்க அனுமதிப்பது” என 3 கொடூர நிபந்தனைகளைச் சிறுமியின் வீட்டார் விதித்துள்ளனர். வேறு வழியில்றி அந்த வாலிபரும் அவனது பெற்றோரும் நிர்வாணமாக்கப்பட்டு வீதியில் நடக்க வைக்கப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்பட்டது.

Advertisement

இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கல்கத்தா போலீசார், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை உடனடியாகக் கைது செய்தனர். தொடர்ந்து, குற்றச் சம்பவத்தை மறுசீரமைப்பு செய்வதாகக் கூறி, கைது செய்யப்பட்ட கொடூரக் குற்றவாளிகளின் இடுப்பில் கயிற்றைக் கட்டி, வெறும் உள்ளாடையுடன் தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்று அதிரடி விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அம்மாநில அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in