CRIME
“பிறப்புறுப்பில் ஆழமாக இருந்த காயம்..” 2 வயது குழந்தையைச் சீரழித்த சொந்தக்காரன்… மருத்துவமனையில் அம்பலமான பகீர் உண்மை..!!
சென்னை எண்ணூர் பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி வீட்டின் வெளியே விளையாடிவிட்டு அழுதுகொண்டே திரும்பிய குழந்தையைக் கீழே விழுந்துவிட்டதாகப் பெற்றோர் நினைத்துள்ளனர். ஆனால், மறுநாள் குழந்தையின் தொடைப் பகுதியில் வீக்கம் குறையாததால், முதலில் தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் அக்டோபர் 23 அன்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நடத்தப்பட்ட தீவிர மருத்துவப் பரிசோதனையில், பச்சிளம் குழந்தை மிகக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மருத்துவர்கள் அளித்த தகவலால் உறைந்துபோன பெற்றோர் குழந்தையிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ரஞ்சித் என்ற நபர் இந்த அக்கிரமத்தைச் செய்தது அம்பலமானது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ரஞ்சித்தைக் கைது செய்து தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைதான ரஞ்சித் ஒரு மீனவர் என்பதும், அவருக்குத் திருமணமாகி மனைவியும் குழந்தையும் இருப்பதும் தெரியவந்துள்ளது. குடும்பப் பிரச்சினை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்றதால், எண்ணூரில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு வந்து ரஞ்சித் தங்கியுள்ளார். அப்போது, அங்கு விளையாட வந்த இரண்டரை வயது பச்சிளம் குழந்தைக்கு அன்பாகப் பேசுவது போல நடித்து, டீ கொடுத்து நெருக்கத்தை ஏற்படுத்தி இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
