LATEST NEWS
“வீட்டுல தனியா விட தைரியமில்லை சார்…” நள்ளிரவு 1 மணி மடியில் பிஞ்சு குழந்தையுடன் டெலிவரி பாய்.. நெட்டிசன்களை கண்கலங்க வைத்த சம்பவம்..!!
நள்ளிரவு 1 மணியளவில் கடும் குளிரிலும் பசியிலும் ஓடும் சைக்கிளில் உணவு டெலிவரி செய்து கொண்டிருந்த தந்தையின் மடியில், ஒரு பிஞ்சு குழந்தை உறங்கிக் கொண்டிருந்த நெஞ்சை உலுக்கும் காட்சி தற்போதைய சமூக ஊடகங்களில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியாகக் காரில் சென்ற நபர் ஒருவர், இந்த நள்ளிரவு நேரத்தில் ஏன் ஒரு பிஞ்சு குழந்தையைத் தூக்கிக் கொண்டு அலைகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த டெலிவரி ஊழியர் புன்னகையுடன், “சார், இது என் மகள்; இவள் பிறந்த சில நிமிடங்களிலேயே என் மனைவி எங்களை விட்டு பிரிந்து இறந்துவிட்டாள். இவளை வீட்டில் தனியாக விட்டுவர எனக்குத் தைரியமில்லை” என்று கூறியுள்ளார்.
“நான் வேலைக்குச் செல்லாவிட்டால் என் மகளின் சின்ன வயிற்றை என்னால் எப்படி நிரப்ப முடியும்?” என்று அந்தத் தந்தை கூறிய வார்த்தைகள், காரில் வந்தவரின் கண்களைக் குளமாக்கியதுடன் இணையவாசிகளின் இதயங்களை உலுக்கியுள்ளது. தன் மகளுக்காக இந்த ஒட்டுமொத்த உலகத்துடனும், வறுமையுடனும் போராடத் துணிந்த இந்தத் தந்தையின் அர்ப்பணிப்பு, தந்தை பாசத்தின் உச்சத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது. தமக்காக உருகி உருகி உழைக்கும் ஒரு தந்தை, தன் குழந்தையை வளர்ப்பதற்காகத் தன்னைத் தானே எவ்வளவு தியாகம் செய்து கொள்கிறார் என்பதற்கு இந்த வைரல் வீடியோ ஒரு சிறந்த உதாரணமாகும்.
