“அவர் வந்து போனதில் இருந்து எங்கள் வாழ்க்கையே நாசமாகிவிட்டது..!” PM மோடி வந்ததால் வந்த வினை… மீரா மாஞ்சியின் நெஞ்சை உலுக்கும் கண்ணீர் கதை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவர் வந்து போனதில் இருந்து எங்கள் வாழ்க்கையே நாசமாகிவிட்டது..!” PM மோடி வந்ததால் வந்த வினை… மீரா மாஞ்சியின் நெஞ்சை உலுக்கும் கண்ணீர் கதை..!!

Published

on

பிரதமர் நரேந்திர மோடி கடந்த காலத்தில் அயோத்திக்குச் சென்றபோது, ஏழைப் பெண்ணான மீரா மாஞ்சியின் வீட்டிற்கு நேரில் சென்று டீ குடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளானது. ஆனால், இன்று அதே மீரா மாஞ்சியின் குடும்பம் மிகப்பெரிய கடனில் மூழ்கி, கடன் வசூலிக்கும் ரிகவரி ஏஜெண்டுகளின் தினசரி மிரட்டலால் தவித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் வந்து சென்ற பிறகு தங்களின் வாழ்க்கை முற்றிலுமாக நாசமாகிவிட்டதாக அக்குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பிரதமர் மோடி அங்கிருந்து சென்ற பிறகு, மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீரா மாஞ்சியின் வீட்டிற்குத் தொடர்ந்து வரத் தொடங்கியுள்ளனர். மீராவிற்குப் பூக்கள் விற்பனை செய்ய நிரந்தரமான ஒரு கடையையும், டென்ட் ஹவுஸில் வேலை செய்து வந்த அவரது கணவர் சூரஜ் மாஞ்சிக்கு ஒரு புதிய தொழிலையும் அமைத்துத் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

சூரஜ் மாஞ்சி தாங்கள் பாரம்பரியமாகப் படகோட்டும் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் என்பதால், தங்களுக்கு ஆற்றங்கரையில் ஓட்டுவதற்கு ஒரு படகு வாங்கித் தருமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். இதன்பேரில், அதிகாரிகள் அவர்களது பெயரிலேயே சுமார் 3 லட்சம் ரூபாய் வங்கிப் கடனுக்கு ஏற்பாடு செய்து படகையும் கட்டிக் கொடுத்துள்ளனர். ஆனால், தற்போது அந்தப் படகு மூலமாகப் போதிய வருமானம் இல்லாததாலும், மீரா மாஞ்சிற்கு அதிகாரிகள் வாக்குறுதி அளித்தபடி பூ விற்பனை செய்ய நிரந்தரக் கடை கிடைக்காததாலும் அவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால், தினசரி அவர்களது வீட்டிற்கு வரும் கடன் மீட்பு முகவர்கள், 3 லட்சம் ரூபாய் கடனை உடனடியாகச் செலுத்தவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டி வருவதால், அக்குடும்பம் பெரும் நிம்மதியின்றித் தவித்து வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in