அடக் கொடுமையே.. 5 ஆண்டுகால உழைப்பு… பிளாஸ்டிக் டப்பாவில் சேர்த்து வைத்த ரூ.1 லட்சத்திற்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் ஏழைத் தாயின் கண்ணீர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக் கொடுமையே.. 5 ஆண்டுகால உழைப்பு… பிளாஸ்டிக் டப்பாவில் சேர்த்து வைத்த ரூ.1 லட்சத்திற்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் ஏழைத் தாயின் கண்ணீர்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள புல்வாரி கிராமத்தில், ஏழைக் குடும்பம் ஒன்றின் 5 ஆண்டு கால உழைப்பும் கனவும் எலிகளால் ஒரே நொடியில் சிதைந்து போன நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்தக் குடும்பத்தில் கணவர் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவரால் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை. இதனால், அவரது மனைவி வீட்டில் ஒரு எருமை மாடு வாங்கி பால் வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த ஒரு லட்சம் ரூபாயைப் பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் சேமித்து வைத்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்தப் பிளாஸ்டிக் டப்பாவை எலிகள் கடித்துத் துவம்சம் செய்ததோடு, உள்ளே இருந்த அனைத்து ரூபாய் நோட்டுகளையும் துண்டு துண்டாகக் கடித்து நாசமாக்கியுள்ளன. தற்போது அந்தப் பெண் பெரும் போராட்டத்திற்குப் பிறகு வெறும் 4 முதல் 5 ஆயிரம் ரூபாயை மட்டுமே மீட்க முடிந்துள்ளது.

பணத்தை ஒரு பீரோவிலோ அல்லது இரும்புப் பெட்டியிலோ வைத்திருக்கலாமே என்று அக்கம் பக்கத்தினர் கேட்டதற்கு, தங்களிடம் ஒரு பீரோவோ பெட்டியோ கூட வாங்குவதற்கு வசதி இல்லாததே தங்களின் ஏழ்மை நிலை என்று அந்தப் பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், வங்கியில் பணத்தைச் சேமித்து வைத்தால் அவர்கள் அதைத் திரும்பத் தர மாட்டார்களோ என்ற பயத்தின் காரணமாகவே, அவர் வீட்டிலேயே பிளாஸ்டிக் டப்பாவில் பணத்தைப் பூட்டி வைத்துள்ளார். வறுமையின் காரணமாக வங்கியின் மீது இருந்த அறியாமையும், போதிய பாதுகாப்பு வசதி இல்லாததும் அந்த ஏழைத் தாயின் வாழ்வாதாரக் கனவை எலிகளின் வாய்க்கு இரையாக்கியுள்ள இந்தச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in