CRIME
அடிப்பாவி.. வாடகை அறையில் நடுராத்திரியில் கள்ளக்காதலனுடன் மனைவி செய்த காரியம்.. தீடீரென நுழைந்த கணவன்.. அடுத்து நடந்த அல்டிமேட் ட்விஸ்ட்.. வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், திருமணமான 15 ஆண்டுகளுக்குப் பிறகு 4 குழந்தைகளின் தாயான அஞ்சு என்ற பெண், தனது கள்ளக்காதலன் சஞ்சய் என்கிற கீதமுடன் தனி அறையில் கர்வா சௌத் பண்டிகையைக் கொண்டாடியபோது கணவனிடம் கையும் களவுமாக சிக்கிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தோல்புர் பகுதியைச் சேர்ந்த அஞ்சுவிற்கும் அவரது கணவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவருடன் அஞ்சுவிற்கு ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வாடகை அறை எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். மனைவியின் இருப்பிடத்தை அறிந்த கணவன், தனது குடும்பத்தினருடன் அங்கு அதிரடியாகச் சென்று இருவரையும் ரெட்-ஹேண்டடாகப் பிடித்துள்ளார்.
கள்ளக்காதல் ஜோடி பிடிபட்டதைத் தொடர்ந்து, அந்த வாடகை வீட்டின் அருகிலேயே இரு குடும்பத்தாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரும் கலவரமாக மாறியது. குறிப்பாக, கணவனின் குடும்பத்தைச் சேர்ந்த நாத்தனார் மற்றும் மூத்த நாத்தனார்களுக்கு இடையே ஒருவரையொருவர் கைகளால் குத்தியும், கால்களால் உதைத்தும் நடுரோட்டில் பயங்கரமாக மோதிக் கொண்டனர். 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பண்டிகை கொண்டாடிய பெண்ணின் செயலும், அதன் பின்னர் குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட இந்த அதிரடி அடிதடி சண்டையும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
