CRIME
“திக் திக் நிமிடம்..!” மலைப்பாதையில் பிரேக் ஃபெயிலியரான பஸ்… மரண பயத்தில் பயணிகள் செய்த அதிரடி காரியம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கதிகுண்ட்பகுதியில் மலைப்பாதை ஒன்றில் ஏராளமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால் நெஞ்சை உலுக்கும் விபரீதச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பேருந்து செங்குத்தான மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது பிரேக் ஃபெயிலியர் ஆனதால், அது கட்டுப்பாட்டை இழந்து மிக வேகமாகப் பின்னோக்கி உருளத் தொடங்கியது. பேருந்தை நிறுத்த ஓட்டுநரும் இன்னும் சிலரும் எவ்வளவோ போராடியும், அதனை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் பேருந்திற்குள் இருந்த பயணிகள் அனைவரும் மரண பயத்தில் அலறியுள்ளனர்.
பேருந்து பள்ளத்தில் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், அது நகர்ந்து கொண்டிருக்குபோதே பயணிகள் ஒவ்வொருவராகப் பேருந்திலிருந்து வெளியே குதிக்கத் தொடங்கினர். அதிர்ஷ்டவசமாகப் பேருந்து இன்னும் வேகம் எடுப்பதற்குள் பயணிகள் அனைவரும் சாமர்த்தியமாக வெளியே குதித்துத் தப்பினர். அதன் பின்னர், பேருந்தில் யாரும் இல்லாத நிலையில், கீழே இருந்தவர்கள் தங்களின் உயிரைப் பணையம் வைத்து ஓடிச் சென்று, பேருந்தின் டயர்களுக்கு அடியில் பெரிய கற்களை முட்டுக் கொடுத்து ஒரு வழியாகப் பேருந்தை நிறுத்தியுள்ளனர். நூலிழையில் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்ட இந்த திக் திக் நிமிடங்களின் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பார்ப்போரை உறைபனிய வைக்கிறது.
