“எனக்கு ரூ.1.5 லட்சம் வேணும்..” PG படிக்கப் பணம் கேட்ட காதலி… சாக்கில் கட்டி தண்டவாளத்தில் வீசிய கணவன் & மனைவி..! நடு இரவில் அரங்கேறிய கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“எனக்கு ரூ.1.5 லட்சம் வேணும்..” PG படிக்கப் பணம் கேட்ட காதலி… சாக்கில் கட்டி தண்டவாளத்தில் வீசிய கணவன் & மனைவி..! நடு இரவில் அரங்கேறிய கொடூரம்..!!

Published

on

ஜார்க்கண்ட் மாநிலம் கிரீடீஹ் மாவட்டத்தில் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணத்தைக் கேட்டுத் தொல்லை கொடுத்ததால், திருமணமான காதலன் தனது மனைவியுடன் சேர்ந்து காதலியை கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த திடுக்கிடும் கொலை வழக்கை விசாரித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்த காவல்துறையினர், முக்கியக் குற்றவாளியான காதலனையும் அவரது மனைியையும் கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பல்சர் மோட்டார் சைக்கிள், ஒரு கைப்பேசி மற்றும் சாக்குமூட்டை உள்ளிட்ட பிற பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

காவல்துறையின் விசாரணையில், கொல்லப்பட்ட பெண் லக்ஷ்மி குமாரி என்பதும், இவருக்கும் சதியா காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த வினோத் மண்டல் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காதலர் தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. குற்றவாளி வினோத் சியாசாகி இரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார், அங்கேதான் இருவருக்கும் இடையேயான காதல் தொடங்கியது. லக்ஷ்மி முதுகலை படித்து வந்த நிலையில், ஆந்திராவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கேட்டு வினோத்திடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.

Advertisement

தொடர்ந்து பணம் கேட்டு வந்த தொல்லையால் ஆத்திரமடைந்த வினோத், காதலியிடமிருந்து தப்பிக்கத் திட்டம் தீட்டினார். இதன்படி, கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி லக்ஷ்மியைச் சந்திப்பதாகக் கூறி வரவழைத்து, ஒரு ஆளில்லா அறைக்கு அழைத்துச் சென்று இரவு நேரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர், தனது மனைவி சவிதா தேவியுடன் சேர்ந்து சடலத்தைச் சாக்குமூட்டையில் கட்டி, அது ஒரு விபத்து போல் காட்டுவதற்காக மோட்டார் சைக்கிளில் கொண்டுபோய் இரயில் பாதை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in