CRIME
“என் காதலனுக்காகத்தான் இத பண்ணேன்..!” ஏடிஎம் வாசலிலேயே ஊழியர்களை மிரட்டி ஸ்கெட்ச் போட்ட 22 வயது இளம்பெண்.. போலிசாரையே அதிரவைத்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் மையத்தில், தொடர் விடுமுறையைப் பயன்படுத்தி ஊழியர்கள் அள்ளிய ரூ.41.70 லட்சம் ரொக்கப் பணத்தைக் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வழக்கில் 22 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்ப்பூர் அக்ஷயபாத்ரா பகுதியில் உள்ள அந்த ஏடிஎம்-மில் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை பூஜை என தொடர்ந்து 3 நாட்கள் வங்கிக்கு விடுமுறை என்பதால் பெரும் தொகை சேர்ந்திருந்தது. திங்கட்கிழமை காலை வங்கி ஊழியர்கள் ஏடிஎம்-மில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணப்பையைப் பறித்துக்கொண்டு தப்பினர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், 48 மணி நேரத்திற்குள் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து, டி-மார்ட்டில் பணிபுரியும் அன்ஷு குமாரி ஜாதவ் என்ற 22 வயது பெண்ணைக் கைது செய்தனர். அவரது வாடகை அறையிலிருந்து ஒரு சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்த ரூ.26.80 லட்சம் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றினர். விசாரணையில், அவரது காதலனான மஸ்த்ராம் மீனா என்பவரின் கடனை அடைப்பதற்காக, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரே ஏடிஎம்-மை நோட்டமிட்டு ஊழியர்கள் வரும் தகவலைக் கொடுத்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது அம்பலமானது. இதில் தலைமறைவாக உள்ள அவரது காதலன் மற்றும் கூட்டாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
