CINEMA
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..” ஜோதிகாவை மேடையில் வைத்தே புகழ்ந்து தள்ளிய சூர்யா… பதிலுக்கு ஜோதிகா செய்த நெகிழ்ச்சியான காரியம்..!!
ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென், லால், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
விழாவில் மேடையில் பேசிய நடிகர் சூர்யா தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகா குறித்துப் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று குறிப்பிட்ட அவர், தனது வாழ்க்கையில் இன்று தான் இந்த நிலையில் இருப்பதற்கும், சரியான வழியில் செல்வதற்கும் தன் மனைவியின் வழிகாட்டுதலே முக்கியக் காரணம் என்று தெரிவித்தார். தன் வாழ்க்கையில் பல தவறுகளைத் செய்திருந்தாலும், எல்லாவற்றிலும் உறுதுணையாக நின்று தன்னை வழிநடத்தியவர் ஜோதிகா தான் என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
ஜோதிகா ஒரு சிறந்த தாய், சிறந்த தோழி, மிகச்சிறந்த வாழ்க்கைத்துணை மட்டுமல்லாமல், மிகவும் வலிமையான ஒரு பெண் என்றும் சூர்யா புகழாரம் சூட்டினார். சூர்யா பேசிக் கொண்டிருக்கும் போதே, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஜோதிகா மகிழ்ச்சியுடன் அவரை நோக்கி முத்தங்களைப் பறக்க விட்டார். இந்த அழகான தருணம் அரங்கத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியதுடன், கூட்டத்தில் பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
