CRIME
“என் பொண்ணு இனி வரமாட்டா..” 11-ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. அதிகாரிகளின் மெத்தனத்தால் பறிபோன பிஞ்சு உயிர்..! திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் மாலிஹாபாத் பகுதியில் மிகவும் சோகமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு 11ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமி, பக்கத்து வீட்டு நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாலும், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதாலும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பள்ளிக்குச் சென்று வரும் வழியில் அக்கம் பக்கத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் மாணவியின் சைக்கிளை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தன் குடும்பத்தினரிடம் தெரிவித்ததை அடுத்து, தட்டிக்கேட்ட குடும்பத்தினர் மீதும் எதிர்தரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க முயன்ற போதிலும், உரிய நேரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த அக்டோபர் 13ஆம் தேதியன்று இது குறித்து புகார் அளிக்கப்பட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அதன்பிறகு அக்டோபர் 24ஆம் தேதி ஐ.ஜி.ஆர்.எஸ் போர்ட்டலிலும் புகாரளித்துள்ளனர். ஆனால், இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகும் எதிர் தரப்பிலிருந்து தொல்லைகள் தொடர்ந்து வந்ததால் மனமுடைந்த சிறுமி, வீட்டிற்குள் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, காவல் துறையின் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி.ஆர்.எஸ் தளம் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக உதவி காவல் நிலைய பொறுப்பாளர் சுரேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட நபர் மீது முன்னதாகவே உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட இந்த விவகாரத்தில் காவல்துறையின் காலதாமதமான மற்றும் மெத்தனப் போக்கு குறித்து தற்போது பல்வேறு தரப்பிலிருந்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
