LATEST NEWS
பட்டாசு பிரியர்களே நோட் பண்ணுங்க..” காலை 6 – 7, மாலை 7 – 8 மட்டும் வெடி வெடிக்கனும்.. தமிழக அரசின் முக்கிய உத்தரவு..!!
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மேலும், அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாசு குறைந்த பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பாகத் தீபாவளியைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
