CRIME
பகீர்.. சொகுசு காரில் வந்த பெண் செய்த பயங்கரம்.. கொதிக்கும் எண்ணெய் உடலில் பாய்ந்து 3 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
பெங்களூரு புறநகப் பகுதியான பன்னெருகட்டா அருகே உள்ள ஹோம்மாதேவனஹள்ளியில் கடந்த மாதம் 28ஆம் தேதி அதிவேகமாக வந்த மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் ரக எஸ்யூவி கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த கபாப் கடைக்குள் புகுந்து பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளது. சஜினா பேகம் என்ற பெண் ஓட்டி வந்த அந்தக் கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது முதலில் மோதிவிட்டு, பின்னர் ‘ஹலேவூரம்மா கபாப் சென்டர்’ என்ற கடைக்குள் வேகமாகப் புகுந்தது. இந்த அதிவேக மோதலின் தாக்கத்தால், கடையில் கபாப் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சூடான எண்ணெய் அங்கிருந்தவர்கள் மீது ஊற்றியதில் பெரும் விபரீதம் நிகழ்ந்தது.
இந்தக் கொடூர விபத்தில் கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டு பசவராஜ், முனிகிருஷ்ணா மற்றும் மஜேஷ் ஆகிய மூன்று நபர்கள் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது மேடெக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் கடையிலிருந்த பொருட்கள் அனைத்தும் நாசமடைந்ததுடன், பல மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பன்னெருகட்டா காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய காரைப் பறிமுதல் செய்து, அதன் பெண் ஓட்டுநரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
