LATEST NEWS
61 லட்சம் மாணவர்களுக்கு செம ஸ்வீட் நியூஸ்..! முதல்வர் விஜய்யின் மெகா குழந்தைகள் தின பரிசு – கண்டிப்பான உத்தரவு..!!
தமிழகத்தில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி பள்ளிகளில் நடைபெற உள்ள குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, 61.84 லட்சம் மாணவர்களுக்கு தலா 25 கிராம் எடையுள்ள கேக் வழங்கப்பட உள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்தத் திட்டத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் மாவட்ட வாரியாகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, கேக் வைக்கப்படும் மற்றும் விநியோகிக்கப்படும் இடங்கள் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், விநியோகம் செய்யப்படும் கேக் உறைகளின் மீது ‘Not For Sale’ (விற்பனைக்கு அல்ல) என்ற வாசகம் தெளிவாக இடம்பெற வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் தரம் குறைந்த கேக்குகள் விநியோகிக்கப்படக் கூடாது என்றும் அதிகாரிகள் மற்றும் பள்ளிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது.
