“வெறும் 90 ரூபாய் சில்லறைக்காக இப்படியா..?” ஓடும் பேருந்தில் இருந்து பெண் நடத்துனரை கீழே தள்ளிய பயணி.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“வெறும் 90 ரூபாய் சில்லறைக்காக இப்படியா..?” ஓடும் பேருந்தில் இருந்து பெண் நடத்துனரை கீழே தள்ளிய பயணி.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் கம்மம் ரீஜியனைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் பேருந்து நடத்துனர் குண்ட்லா பிரவளிகா, வெறும் 90 ரூபாய் சில்லறைத் தகராறு காரணமாகப் பயணி ஒருவரால் ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு கொடூரமான முறையில் உயிரிழந்துள்ளார். மௌனிகா என்ற பெண் பயணி, தனது மகனின் 10 ரூபாய் கட்டண டிக்கெட்டிற்காக நடத்துனர் பிரவளிகாவிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளார். அப்போது பிரவளிகாவிடம் மீதி சில்லறை இல்லாததால், 90 ரூபாய் பாக்கியைத் டிக்கெட்டின் பின்புறம் எழுதி வைத்துவிட்டுப் பேருந்தை விட்டு இறங்கும்போது பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்தப் பயணி பணத்தை உடனடியாகத் தருமாறு வற்புறுத்தி நடத்துனருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, பேருந்தின் படிக்கட்டு அருகே நின்றுகொண்டிருந்த பிரவளிகாவை மௌனிகா பலமாக ஓடும் பேருந்திலிருந்து வெளியே தள்ளியுள்ளார்.

அப்போது நிலைதடுமாறி சாலையில் விழுந்த பிரவளிகாவின் இரண்டு கால்களின் மீதும் பேருந்தின் பின்சக்கரங்கள் ஏறி இறங்கியதில், அவரது கால்கள் நசுங்கிப் பலத்த காயமடைந்தார். கடந்த அக்டோபர் 25 அன்று நடந்த இந்த விபரீத சம்பவத்தைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்களாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரவளிகா, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு குடும்ப பாரத்தைச் சுமப்பதற்காக அரசுப் போக்குவரத்து கழகத்தில் வேலைக்குச் சேர்ந்த ஒரு இளம் பெண், வெறும் 90 ரூபாய் சில்லறைக்காகப் பயணியின் கோபத்தால் உயிரை இழந்த இந்தச் சோகச் சம்பவம் ஒட்டுமொத்த பொதுமக்களையும் உலுக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in