CRIME
காவல் நிலைய வாசலிலேயே SI-க்கு நேர்ந்த கொடூரம்.. கஞ்சா போதையின் உச்சத்தில் கத்தியை உருவிய வாலிபர்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
சென்னை செங்குன்றம் காவல் நிலையம் மற்றும் பேருந்து நிலையப் பகுதிக்கு அருகே, கஞ்சா போதையில் இருந்த ஒரு வாலிபர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்ட முயன்ற துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையப் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிக்கொண்டிருந்த அந்த இளைஞரை, அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்துள்ளார். அப்போது கஞ்சா போதையின் உச்சத்தில் இருந்த அந்த நபர், எதிர்பாராதவிதமாகத் தனது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அதிகாரியை நோக்கிப் பாய்ந்து வெட்ட முயன்றுள்ளார்.
சாமர்த்தியமாகச் செயல்பட்ட அந்த உதவி ஆய்வாளர் நூலிழையில் தாக்குதலிலிருந்து உயிர் தப்பிய நிலையில், அங்கிருந்த பிற காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். பரபரப்பான பேருந்து நிலையப் பகுதியிலும், காவல் நிலையத்திற்கு மிக அருகிலும் காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை புறநகர்ப் பகுதிகளில் பெருகிவரும் கஞ்சா கலாச்சாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பல்வேறு சமூக விவாதங்களும், பொதுமக்களின் கண்டனங்களும் எழுந்துள்ளன.
