மனைவியின் “பாசப் போராட்டம்” விளைவித்த பயங்கரம்.. மாமியார், குழந்தை உட்பட ஒரே குடும்பத்தில் 7 பேரை துடிதுடிக்கக் கொன்ற கார் ஓட்டுநர்..!! – cinefeeds
Connect with us

CRIME

மனைவியின் “பாசப் போராட்டம்” விளைவித்த பயங்கரம்.. மாமியார், குழந்தை உட்பட ஒரே குடும்பத்தில் 7 பேரை துடிதுடிக்கக் கொன்ற கார் ஓட்டுநர்..!!

Published

on

பெங்களூருவில் தனது மனைவி பிறந்த வீட்டுடன் அதிக நெருக்கம் காட்டியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மாமியார் மற்றும் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பெங்களூரு பாஷ்யம் சர்க்கிள் அருகே வசித்து வந்த இந்துசேகர் என்பவருக்கும், அவரது மனைவி சுனிதாவிற்கும் இடையே, சுனிதா தனது தாய் வீட்டுடன் நெருக்கமாக இருந்தது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சுனிதாவின் தாயும் சகோதரர்களும் அவருக்கு ஆதரவாக நின்றதால், ஆத்திரமடைந்த இந்துசேகர் அவர்கள் அனைவரையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.

இதன்படி, கடந்த மாதம் தனது மனைவி சுனிதாவை அடித்துக் கொன்ற இந்துசேகர், அவர் தோழிகளுடன் சுற்றுலா சென்றுவிட்டதாகக் கூறி குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார். அதன் பின்னர், தனது மைத்துனர்களான சிவகுமார் மற்றும் சங்கரை மது அருந்த வீட்டிற்கு அழைத்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து, அவர்களின் மனைவிகளான திவ்யா, நளினி, மாமியார் ரூபவதி மற்றும் 7 வயது சிறுவன் புனீத் ஆகியோரையும் அடுத்தடுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

Advertisement

கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான நளினி காணாமல் போனது குறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் இந்துசேகரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால், வீட்டில் சோதனையிட்டு கண்டறியப்பட்ட ஆதாரங்களை வைத்து நடத்திய விசாரணையில் இந்த 7 பேர் கொலை விபரம் வெளிச்சத்திற்கு வந்தது. நந்தி மலைப் பகுதிகளில் உடல்களை வீசியதாக அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் அங்கு தேடுதல் வேட்டை நடத்தி 7 வயது சிறுவனின் உடலை மீட்டுள்ளனர்; மீதமுள்ள 6 பேரின் உடல்களைத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in