LATEST NEWS
பெரியார் அறிவுலகத்தில் ஊழல்.. ஆதாரம் வெளியானது.. கிழியும் திமுகவின் முகத்திரை… சிக்கும் புள்ளிகள்..!!
பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களைத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சியில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை என அக்கட்சி மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தவெக இந்த ஆதாரங்களை முன்வைத்துள்ளது. இதனால் தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தவெக இடையே தற்போது நேரடி மோதல் வெடித்துள்ளது.
திமுகவின் மறுப்பை முறியடிக்கும் வகையில், குறிப்பிட்ட இரு பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைகளைத் தவெக ஆதாரமாகப் பகிர்ந்துள்ளது. அதன்படி, அகல் விளக்கு பதிப்பகத்திற்கு கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதியும், ஃபீனிக்ஸ் பதிப்பகத்திற்கு பிப்ரவரி 13-ஆம் தேதியும் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ புத்தகக் கொள்முதல் ஆணைகள் (Purchase Orders) வெளியிடப்பட்டுள்ளன.
அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களை தங்களுக்குத் தெரியவே தெரியாது என திமுக பகல் வேடம் போடுவதாகத் தவெக கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த ஆதாரங்களின் மூலம் திமுகவின் உண்மை முகம் மக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. தவெக வெளியிட்டுள்ள இந்த கொள்முதல் ஆணை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
