CRIME
“நான்தான் கொன்னேன், பாடி காட்டுல இருக்கு!”… காதலியை கொலையைச் செய்துவிட்டு 112-க்கு கூப்பிட்ட கொடூரன்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், தனது முன்னாள் காதலி சமரீன் என்பவருக்கு வேறொரு இடத்தில திருமணம் நிச்சயமாகியதால் ஆத்திரமடைந்த ஃபிரோஸ் என்ற இளைஞர், அவரை நயவஞ்சகமாக வரவழைத்துக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மீரட் பகுதி காவல்துறையினரின் விசாரணையின்படி, ஃபிரோஸும் சமரீனும் கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் சமரீன் அவரிடமிருந்து விலகியுள்ளார். இதற்கிடையில், சமரீனின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு நபருடன் திருமண ஏற்பாடுகளைச் செய்ததால், இதனால் ஆத்திரமடைந்த ஃபிரோஸ், சமரீனைத் தனிமையில் சந்தித்துப் பேசுவதற்காகக் காட்டுப் பகுதிக்கு வரவழைத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலுக்குப் பிறகு, குற்றவாளி ஃபிரோஸ் தானே அவசர உதவி எண்ணான 112-க்குத் தொடர்பு கொண்டு, தான் சமரீனைக் கொலை செய்துவிட்டதாகவும் அவரது உடல் காட்டுப் பகுதியில் இருப்பதாகவும் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சமரீனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, குற்றவாளி ஃபிரோஸை அதே இடத்தில் வைத்துக் கைது செய்தனர். தற்போது, இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
