LATEST NEWS
இந்தியன் வங்கியில் 1,500 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ..!!
இந்தியன் வங்கியில் 2026-27-ம் நிதியாண்டிற்கான புதிய அப்ரண்டீஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, நாடு முழுவதும் மொத்தம் 1,500 அப்ரண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் பிரத்யேகமாக 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வேலை தேடும் தமிழக இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டியது அவசியமாகும். தகுதியான நபர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதிப் பட்டியலின்படி தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு செய்யப்படும் அப்ரண்டீஸ்களுக்கு பயிற்சி காலத்தின் போது மாதம் ரூ.12,300 முதல் ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை அறிய இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indianbank.bank.in/en/career என்ற பக்கத்தை அணுகலாம்.
