அம்மாடியோ.. வெறும் 6 மணி நேரத்தில் 26 பேரை கடித்துக் குதறிய வெறிநாய்.. அலறியடித்து ஓடிய மக்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அம்மாடியோ.. வெறும் 6 மணி நேரத்தில் 26 பேரை கடித்துக் குதறிய வெறிநாய்.. அலறியடித்து ஓடிய மக்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள கில்சிப்பூர் பகுதியில், தெரு நாய் ஒன்று வெறும் 6 மணி நேரத்திற்குள் 26 பேரை கடித்துக் குதறிய அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலான குறுகிய கால அவகாசத்திற்குள், அந்த நாய் வெறிபிடித்தது போல் சந்தைக்குச் சென்று வந்த பொதுமக்களையும், இருசக்கர வாகனங்களில் பயணித்தவர்களையும் குறிவைத்துத் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

திடீரென அரங்கேறிய இந்த நாய் தாக்குதலில் காயமடைந்த 26 பேரும் சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ராஜ்கர் மாவட்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் அந்த வெறிநாயைப் பிடிப்பதற்கான அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அடுத்தடுத்து பலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும், குறிப்பாகச் சந்தைப் பகுதிக்குச் செல்லவும் கடும் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in