CRIME
வயிற்று வலி என அழைத்து வந்த பெற்றோருக்கு ஷாக்..! கழிவறையில் பிரசவித்த சிறுமி, ஜன்னல் வழியாக பச்சிளம் குழந்தை வீசி கொ**..!!
மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில், 16 வயது சிறுமி ஒருவர் தான் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையை நர்சிங் ஹோம் கழிவறை ஜன்னல் வழியாக வெளியே வீசிக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான வயிற்று வலி இருப்பதாகக் கூறிய அந்தச் சிறுமியை, அவரது பெற்றோர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அங்குள்ள நர்சிங் ஹோமில் அனுமதித்துள்ளனர். சனிக்கிழமை காலை கழிவறைக்குச் சென்ற சிறுமி, யாருடைய உதவியுமின்றி அங்கேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
பிரசவித்த சில நிமிடங்களிலேயே, அக்குழந்தையைக் கழிவறை ஜன்னல் வழியாக அவர் வெளியே வீசியுள்ளார். அந்த வழியாகச் சென்ற நபர் ஒருவர், குழந்தை இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு மருத்துவமனை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார். செவிலியர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்டு உள்ளே கொண்டு வருவதற்குள், அந்தப் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.
இச்சம்பவம் குறித்துச் சிறுமியின் பெற்றோரிடம் கேட்டபோது, தங்களுக்கு மகள் கர்ப்பமாக இருந்த விஷயம் தெரியாது என்றும், சாதாரண வயிற்று வலி என்று நம்பியே மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள காவல்துறையினர், நர்சிங் ஹோமின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
