LATEST NEWS
கூட்டணியில் வெடித்த மோதல்..! முதல்வர் விஜய்யை திட்டாமல் காலை சாப்பாடு இறங்காது.. கூட்டணி தலைவர்களைப் போட்டுத் தாக்கிய வைகோ..!!
ஆளுங்கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரு கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் விஜய்யைத் தினமும் விமர்சிக்காமல் காலை உணவுகூட இறங்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாகச் சாடியுள்ளார். அமைச்சரவையில் அங்கம் வகித்துக்கொண்டே அவர்கள் முதலமைச்சரைத் தொடர்ந்து தாக்கிப் பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்தக் கூட்டணியில் மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) ஆகிய இரு கட்சிகள் மட்டுமே ஆளும் அரசை விமர்சிக்காமல் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக வைகோ தெரிவித்துள்ளார். தமிழகக் கூட்டணி அரசியலில் உட்கட்சிப் பூசல்களும் விமர்சனங்களும் அதிகரித்துள்ள நிலையில், வைகோவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
