தீபாவளி இரவில் அரங்கேறிய கொடூரம்… காதலித்த மகளை அடித்துக் கொன்று… தடயத்தை அழிக்க வயலில் புதைத்து டிராக்டரால் உழுத குடும்பம்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

தீபாவளி இரவில் அரங்கேறிய கொடூரம்… காதலித்த மகளை அடித்துக் கொன்று… தடயத்தை அழிக்க வயலில் புதைத்து டிராக்டரால் உழுத குடும்பம்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் காதல் விவகாரம் காரணமாக, 9-ம் வகுப்பு படிக்கும் தனது மகளைக் குடும்பத்தினரே தீபாவளி இரவன்று கொலை செய்து, கிராமத்திற்கு அருகிலுள்ள வயலில் சடலத்தை புதைத்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராமலும், கொலைக்கான தடயங்களை அழிப்பதற்காகவும் சடலத்தைப் புதைத்த பிறகு அந்த வயல் முழுவதும் டிராக்டர் மூலம் உழப்பட்டுள்ளது. குண்ட்வா சைன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், சிறுமிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையே காதல் இருந்ததைத் தீபாவளி அன்று அறிந்த குடும்பத்தினர், ஆத்திரத்தில் இக்கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை இதுகுறித்து தகவல் அறிந்த குண்ட்வா சைன்பூர் காவல் நிலைய ஆய்வாளர் அமன் குமார் தலைமையிலான போலீசார் சிறுமியின் வீட்டில் சோதனை நடத்தினர். போலீசாரின் வருகையை அறிந்த சிறுமியின் தந்தை மற்றும் குடும்பத்தினர் தப்பியோடிய நிலையில், கிராமத்தைச் சுற்றிவளைத்த போலீசார் சிறுமியின் 18 வயதுக்குட்பட்ட அண்ணனைக் கைது செய்து விசாரித்தனர். காவல் நிலைய விசாரணையில், சிறுமியைக் கொலை செய்து வயலில் புதைத்ததை ஒப்புக்கொண்ட அவர், சடலம் புதைக்கப்பட்ட இடத்தையும் போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அர்ச்சனா பாரதி முன்னிலையில் புதன்கிழமை கிராம மக்களின் கூட்டத்திற்கு இடையே மண்வெட்டியால் வயலைத் தோண்டி சிறுமியின் சடலத்தை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மோதிஹாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல் ஆய்வாளர் அமன் குமார் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படும் சூழலில், தப்பியோடிய தந்தை மற்றும் குடும்பத்தினரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in