LATEST NEWS
“ஒரு பக்கம் தீபாவளி பரிசு… மறுபக்கம் கறார் வார்னிங்…” -தவெக MLA-க்கள் கூட்டத்தில் முதல்வர் விஜய் எடுத்த அதிரடி..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் விஜய் வேட்டி மற்றும் சேலைகளைப் பரிசாக வழங்கியுள்ளார். நேற்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், சிறப்பாகச் செயல்பட்ட சில உறுப்பினர்களின் பணிகளைப் பாராட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே கூட்டத்தில், சமீபத்தில் சர்ச்சைகளில் சிக்கிய அருள் விக்னேஷ் மற்றும் ரவி சங்கர் ஆகியோரிடம் முதலமைச்சர் விஜய் மிகவும் கறாராக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், வெறும் மெமோ கொடுப்பது போல் மீண்டும் எச்சரிக்கை மட்டுமே விடுத்திருப்பது வழக்கமான அரசியல் நடைமுறைதான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
