LATEST NEWS
குடிபோதையில் வெறியாட்டம்..! 75 வயது தந்தையின் தலையைத் தரையில் மோதி அடித்தே கொ**ற மகன்.. ஈரோட்டில் அரங்கேறிய உச்சகட்ட கொடூரம்..!!
ஈரோடு மாவட்டம் புதுமை காலனியைச் சேர்ந்தவர் 75 வயதான அப்துல் ரஹீம். பூ வியாபாரம் செய்து வந்த இவரிடம், இவரது மூன்றாவது மகனான சபிக் (37) மது அருந்திவிட்டு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மனைவியைப் பிரிந்து தந்தையின் வீட்டிலேயே வசித்து வந்த சபிக், சம்பவத்தன்றும் குடிபோதையில் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சபிக் தனது தந்தை அப்துல் ரஹீமின் தலையைப் பிடித்து தரையில் பலமாக மோதித் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முதியவர் அப்துல் ரஹீம், உடனடியாக மீட்கப்பட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தையைக் கொடூரமாகத் தாக்கிய மகன் சபிக்கைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
