CRIME
“அப்பா அம்மா இறந்துட்டாங்க” கதறியபடி தந்தைக்கு போன் செய்த குழந்தைகள்… வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் வாயில் துணியை திணித்து நடந்த கொடூரம்..!!
ஹைதராபாத் மீர்பேட் பகுதியில் உள்ள தத்துநகர் ஜிலேலகுடா பகுதியில் ஒரு பெண் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலட்சுமி ரெசிடென்சியில் வசித்து வரும் மத்திய அரசு ஊழியர் அருண்குமார் என்பவரின் மனைவியான அனிதா (35) என்பவரே இந்தச் கொலையில் உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், அனிதாவின் வாயில் துணியைத் திணித்து, அவரது கால்களைக் கட்டி வைத்து மிகவும் கொடூரமான முறையில் இந்தக் கொலையை அரங்கேற்றியுள்ளனர்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த தங்களது தாயின் உடலைக் கண்டு அதிர்ந்துபோன குழந்தைகள், உடனடியாகத் தங்களது தந்தைக்குத் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
