LATEST NEWS
“நான் மட்டும் கலெக்டரா இருந்திருந்தா… அருள் விக்னேஷை என்கவுண்டர் செய்திருப்பேன்..” தவெக MLA மீது ஜெயக்குமார் ஆவேசம்..!!
கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எழுந்த புகார் குறித்து ஜெயக்குமார் மிகுந்த கோபத்துடன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்துப் பேசிய அவர், “நான் மட்டும் கலெக்டராக இருந்திருந்தால் அருள் விக்னேஷை என்கவுண்டர் செய்திருப்பேன்” என வெகுண்டெழுந்து பேசியுள்ளார்.
மேலும் அந்தப் பேட்டியில் ஆவேசமாகத் தொடர்ந்த அவர், “உங்கள் வீட்டில் யாராவது குடித்துவிட்டுத் தகராறு செய்தால் அவர்களைக் கட்டிவைத்து அடித்துத் துவைத்துச் சுட்டுத் தள்ள வேண்டும்” என்றும் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
