ஓடும் ரயிலில் கொடூரம்.. பாலியல் சீண்டலைத் தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி.. 53 வயது கொடூரனின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஓடும் ரயிலில் கொடூரம்.. பாலியல் சீண்டலைத் தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி.. 53 வயது கொடூரனின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

மும்பை புறநகர் ரயிலில் பயணம் செய்த 20 வயது இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட 53 வயதான ஜிதேந்திர ஹிரேமுக் என்ற நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர். போரிவலியிலிருந்து விரார் நோக்கிச் சென்ற ரயிலில் ஏறிய அந்த இளம்பெண்ணிடம் ஜிதேந்திரா தொடர்ந்து அநாகரிகமாக நடந்துகொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்தப் பெண் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அவர், சிறிதும் இரக்கமின்றி அந்தப் பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, எதுவும் நடக்காதது போல் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து நழுவிச் சென்றுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் கீழே விழுந்த அந்த இளம்பெண், தனது இடது கையை இழந்து படுகாயமடைந்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர், ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டனர். அதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ஜிதேந்திர ஹிரேமுக்கை போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in