செம செக்..! அரசு டெண்டர்களில் இனி இவர்களின் ஆதிக்கம் இருக்காது… திடீர் ஆப்பு வைத்த தமிழக அரசு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செம செக்..! அரசு டெண்டர்களில் இனி இவர்களின் ஆதிக்கம் இருக்காது… திடீர் ஆப்பு வைத்த தமிழக அரசு..!!

Published

on

அரசு டெண்டர்களில் இனி பினாமி நிறுவனங்களின் ஆதிக்கமோ அல்லது ஒரு குடும்பத்தின் ஆதிக்கமோ இருக்காது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு துறை சார்ந்த டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்காத நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் வைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அடுத்த 50 முதல் 75 ஆண்டுகளுக்குத் தரத்துடன் நிலைத்து நிற்கும் வகையில் G+10 அல்லது G+14 மாடிகளாகக் கட்டப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்துக் குற்றம்சாட்டிய அவர், 2025-ம் ஆண்டில் மட்டும் நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பள்ளங்களை மூடும் பணிகளுக்காக ரூ.2,200 கோடி ஒதுக்கி ஊழல் நடந்துள்ளதாகத் தெரிவித்தார். பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 5,626 பள்ளிகளில் சுமார் 80 சதவீதம் ஊழல் நடந்துள்ளதாகவும், அப்பள்ளிகளில் 15,661 கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருக்கும் நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என அவர் வேதனை தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அடுத்த 2 ஆண்டுகளில் பள்ளிகள், சமூகநீதித் துறை விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் அனைத்தும் முழுமையாகச் சரிசெய்யப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in