LATEST NEWS
வீடு கட்டுபவர்களுக்கு இன்ப அதிர்ச்சி..! “இனி அதிகாரிகள் அனுமதி தேவையில்லை” .. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் வீடு மற்றும் சிறிய வணிகக் கட்டிடங்கள் கட்டுவதை எளிதாக்கும் வகையில், தமிழக அரசு ‘மூன்றாம் தரப்பு சான்றிதழ்’ (Third Party Certification) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் DTCP அல்லது CMDA அதிகாரிகளிடம் நேரடியாக அனுமதி பெறத் தேவையின்றி, சிங்கிள் விண்டோ இணையதளத்தில் பதிவு செய்துள்ள அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்கள் மூலமாகவே நேரடியாக அனுமதியைப் பெற முடியும்.
இந்தத் திட்டத்தின்படி 750 சதுர மீட்டர் பரப்பளவு மற்றும் 14 மீட்டர் உயரம் வரையிலான குடியிருப்புக் கட்டிடங்களுக்கும், 300 சதுர மீட்டர் வரையிலான வணிகக் கட்டிடங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. ஆவணங்களைப் பதிவேற்றி கட்டணம் செலுத்தியதும் QR குறியீட்டுடன் கூடிய அனுமதி ஆவணத்தைப் பெறலாம். எனினும், CRZ கடற்கரைப் பகுதிகள், மலைப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு இது பொருந்தாது.
அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் விரைவான அனுமதி பெற இது உதவும் என்றாலும், தவறான தகவல்களுடன் அனுமதி பெறுவோர் மீது BNS 236 பிரிவின் கீழ் கிரிமினல் வழக்கு மற்றும் விதியை மீறும் பொறியாளர்களின் உரிமம் ரத்து செய்து கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
