LATEST NEWS
“நடவடிக்கை எடுங்க தலைவரே” அறிவாலயத்தை அதிரவைக்கும் தொண்டர்கள் குமுறல்.. Ex அமைச்சர்கள், மா.செ.,க்கள் மீது நடவடிக்கை பாயுமா..?
தேர்தல் தோல்விக்குப் பிறகு மறுசீரமைப்பு குழுவின் மூலம் திரட்டப்பட்ட புகார்களின் அடிப்படையில், கட்சித் தலைமையான அறிவாலயம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் (மா.செ.) மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கட்சி விவகாரங்களில் ரத்தீஷ் உள்ளிட்டோரின் தலையீடுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் தொண்டர்கள் அறிவுறுத்துவதாகக் கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தின் அனைத்து மாவட்ட திமுக பிரிவுகளிலும் கடுமையான உள்கட்சிப் பூசல் நிலவுவதாகவும், இது குறித்துத் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் குமுறலும் எழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
