LATEST NEWS
அடக்கடவுளே.! 23 உயிர்களைப் பறித்த கோர விபத்து..! நொறுங்கிய வாகனத்திற்குள் இருந்து உயிர் தப்பிய 2.5 வயது குழந்தை… அசாமில் நடந்த அதிசயம்..!!
அசாம் மாநிலம் கசிரங்காவில் நடந்த கோர சாலை விபத்தில் 23 பேர் உயிரிழந்த சோகத்திற்கு மத்தியில், இரண்டரை வயது குழந்தை ஒன்று அற்புதமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்டெய்னர் லாரியும், அதிகப்படியான பயணிகளுடன் சென்ற டிராவலர் வாகனமும் மோதிய இந்த விபத்தில் வாகனத்தின் முன்பகுதி முற்றிலும் நசுங்கியதுடன், குழந்தையின் தாயார் ஜோதி மாஜி உட்பட பலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடந்தவுடன் அருகில் இருந்தவர்கள் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முற்றிலும் சேதமடைந்த வாகனத்தின் பின் பக்க உடைந்த கண்ணாடிகள் வழியே அந்தப் பிஞ்சு குழந்தை பத்திரமாக வெளியில் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாயை இழந்துவிட்ட இந்தக் குழந்தையின் இந்த அற்புத உயிர்வாழ்வு காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.
இந்த விபத்தில் மொத்தம் 23 பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் சோகத்திற்கு நடுவே இச்சம்பவம் ஒரு சிறிய ஆறுதலாகவும், அதிசயமாகவும் பார்க்கப்படுகிறது.
