CRIME
“அவன் இல்லனா நான் இல்ல..!” செல்போன் டவரில் ஏறி 19 வயது இளம்பெண் செய்த அதிர்ச்சிச் செயல்.. பதறவைக்கும் காதல் போராட்டம்.. உறைந்துபோன கிராமம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பரிகாவ்ன் பகுதியில், காதலனைத் திருமணம் செய்து வைக்கக் கோரி 19 வயது இளம்பெண் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீர்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கசெர்வா கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் கௌதம் என்பவரின் மகள் நேஹா கௌதம் (19), சமீபத்தில் பர்சாத்தி பகுதியில் உள்ள தனது தாய்வழித் தாத்தா-பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், இன்று காலை திடீரென அப்பகுதியில் உள்ள உயரமான செல்போன் கோபுரத்தின் மீது ஏறிய நேஹாவை, அவ்வழியாகச் சென்ற கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து அங்குக் கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
தகவல்களின்படி, நேஹா கௌதம் தனது சொந்த ஊரான கசெர்வா கிராமத்தைச் சேர்ந்த ஹின்சலால் என்பவரின் மகன் அபிஜீத் கௌதம் (22) என்பவரைக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரே கிராமத்தில் அருகருகே வசித்து வரும் இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், தனது காதலன் அபிஜீத்தைத் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி நேஹா இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
