LATEST NEWS
“அவரைத்தான் கல்யாணம் பண்ணுவேன்..” காதலனுடன் திருமணம் செய்து வைக்க மறுத்த பெற்றோர்… செல்போன் டவர் மீது ஏறி இளம்பெண் செய்த பகீர் சம்பவம்..!!
உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டம் பைத்வாலியா கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், ஷிஷ்கர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி, இவர்களின் காதலுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காதலனுடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்ததால் விரக்தியடைந்த அந்த இளம்பெண், அதிகாலை 5 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த குடும்பத்தினரும், காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணை சமாதானப்படுத்தி கீழே இறங்குமாறு வலியுறுத்தினர். இதனையடுத்து அவர் டவரில் இருந்து கீழே இறங்கியதும், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
