பகீர்..! லோகோ பைலட் எச்சரித்தும் கேட்காத அதிகாரிகள்… பிரேக் இல்லாமல் 463 கி.மீ ஓடிய வந்தே பாரத் ரெயில்… விசாரணை அறிக்கையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர்..! லோகோ பைலட் எச்சரித்தும் கேட்காத அதிகாரிகள்… பிரேக் இல்லாமல் 463 கி.மீ ஓடிய வந்தே பாரத் ரெயில்… விசாரணை அறிக்கையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!

Published

on

அதிவேக வந்தே பாரத் ரெயில் ஒன்று முறையான பிரேக் வசதியின்றி சுமார் 463 கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்டதாக ரெயில்வே துறை விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்டின் ஹதியாவிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் ஜான்சிக்கு காலியான வந்தே பாரத் ரெயில் சரக்கு இன்ஜின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டபோது, அதன் பிரேக்கிங் அமைப்பில் கடுமையான தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

லோகோ பைலட்டுகள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், உயர் அதிகாரிகள் அவற்றை உதாசீனப்படுத்தி அந்த ரெயிலை ஆபத்தான முறையில் தொடர்ந்து இயக்கியுள்ளனர். தற்போது இந்த மாபெரும் அலட்சியம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் ரெயில்வே அமைச்சகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in